Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான்

13 அக், 2017 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Zaira-Wasim-is-a-great-icon-for-youth-across-the-country-says-Aamir-Khan

அமீர்கான் நடித்த தங்கல் படத்தில் அவரது இளம் வயது மகளாக நடித்து புகழ்பெற்றவர் ஜைரா வாசிம். தங்கல் படத்தில் அவரது நடிப்பை பார்த்து, அவரை முன்னணி ரோலில் நடிக்க வைத்து சீக்கெரட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இப்படம் தீபாவளி வெளியீடாக அக்., 19-ம் தேதி வெளியாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் அமீர்.

சமீபத்தில் இப்படம் புரொமோஷன் தொடர்பாக சிங்கப்பூரின் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளிக்கு சென்றிருந்தார் அமீர்கான். அப்போது அவர் பேசும்போது, ஜைரா வாசிமை புகழ்ந்தார். அவர் பேசுகையில், ஹிந்தி சினிமா துறையில் மிகச்சிறந்த நடிகை ஜைரா வாசிம். நான் இப்படி சொல்வதால் என் மீது நிறைய நடிகைகள் கோபப்படலாம். ஆனால் நான் சொல்வது உண்மை தான். இன்றைக்கு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முன்னாடியாக திகழக்கூடியவர் ஜைரா. அவரிடத்தில் நிறைய திறமைகள் உள்ளது.

இவரை மாதிரியே நம் நாட்டில் இன்னும் திறமையான நபர்கள் சிறிய நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஜைரா மும்பையை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் இங்கு வந்து அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டார். தங்கலை தொடர்ந்து இப்போது சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றார்.

Advertisement
ராவில் இணைந்த அபிஷேக் பச்சன்ராவில் இணைந்த அபிஷேக் பச்சன் முக்காபாஸ் ரிலீஸில் மாற்றம் முக்காபாஸ் ரிலீஸில் மாற்றம்


வாசகர் கருத்து (1)

Samuel Prince - தூத்துக்குடி,இந்தியா
14 அக், 2017 - 07:15 Report Abuse
Samuel Prince உங்கள் இன பெண்கள் கருப்பு போர்வைக்குள் ஒளித்துவைத்துளார்கள். அந்த பெண்களில் நிறைய திறமைசாலிகள் இருக்கலாம். அதற்கு ஒரு படம் எடுக்கலாமே அமீர் கான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in