ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நம்மூர் டிவி ஷோக்களில் சந்தானம் புகழ்பெற்று சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பதை போன்று பாலிவுட்டில் கலர்ஸ் டிவியில் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கபில் சர்மா. இவர், கிஸ் கிஸ்கோ பியார் கரூன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் வெற்றி பெறவில்லை.
தற்போது இவர் பிராங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படம். இப்படம் நவ., 10-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரிலீஸ் தேதி நவ., 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிராங்கி படத்தை ராஜிவ் திராங்கா இயக்குகிறார். இவர் கபில் சர்மாவின் சின்ன வயது நண்பர் ஆவார்.