கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை பரோல். சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் தங்களின் சொந்த பணிக்காக தற்காலிகமாக சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைக்கு செல்வது பரோல் என்ற அழைக்கப்படுகிறது.
நடிகர் டாக்டர் ராஜசேகரின் தம்பியும், நடிகருமான செல்வா, ரஜினி பிறந்த தேதியான 12.12.1950 என்பதையே தலைப்பாக கொண்டு ஒரு படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை பரோல் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒருவர் தனது வாழ்வின் மிக முக்கியமான நபரை பார்க்க ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்கு பிறகு பரோலில் வருவது தமிழ் நாட்டு மக்களிடையே பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது. பரோல் என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது . ஒரு வருடம் முன்பு செய்தித்தாள் ஒன்றில் பரோலில் வந்த ஒரு சிறை கைதியின் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியை படித்தேன்.
அதுதான் கதை உருவாக காரணமாக இருந்தது. ஜெயில் தண்டனையில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர், ரஜினியின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண பரோலில் வர ஆசைப்பட்டு எப்படி வந்தார், படத்தின் முதல் கட்சியை பார்த்தாரா, இல்லையா என்பது தான் இந்த காமெடி கலந்த ஜனரஞ்சகமான படத்தின் கதை.
உலகம் முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் மிக பெரிய ரசிகனான எனக்கு அவரது பிறந்த நாளான இந்த தலைப்பை விட சிறப்பான தலைப்பு இருக்காது என தோன்றியது. இப்படத்தில் காமெடி, எமோஷன்ஸ் மற்றும் கலகலப்பு சரியான கலவையில் தரப்பட்டுள்ளது. ரஜினி, ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். வெகு விரைவில் ரிலீஸாகவுள்ளது என்கிறார் செல்வா.