இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி நடித்த படம் தரமணி. ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்திருந்தார். 3 வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி வெளிவந்தது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு சிறிய அளவிலான லாபத்தை கொடுத்தது.
தரமணிக்கு பிறகு சில பெரிய படங்கள் வந்ததால் அப்போது தரமணியை தூக்கி விட்டு புதிய படங்களை போட்டார்கள். இயக்குனர் ராம் இதனை அப்போது வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இப்போது தமிழக அரசின் 10 சதவிகித கேளிக்கை வரியை கண்டித்து புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால் தியேட்டர்களில் திரையிட புதிய படங்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில் தரமணி படத்தை இன்று முதல் மீண்டும் வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். சென்னையில் தேவி, மாயாஜால், வேளச்சேரி லக்ஸ், ஓ.எம்.ஆர், டி.நகர் ஏஜிஎஸ், கோயம்பேடு ரோகிணி தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 60 தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது.