ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சண்டை கலைஞரான மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது காமெடியான வளர்ந்திருக்கிறார். அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு எல்லா படத்திலும் நடித்து வருகிறார். பெரிய நடிகர்களின் படங்களில் கூட ஒரு சில காட்சியாவது தலைகாட்டி விடுகிறார்.
சில படங்களில் முழுநீள கேரக்டரில் நடித்திருந்தாலும் சோலோ ஹீரோவாக அவர் நடித்து வரும் படம் மோகனா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி நாயர். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், அஸ்மித்தா, கிங்காங் உள்பட பலர் நடிக்கிறார்கள். எல்.எஸ்.கே.மூவீஸ் தயாரிக்கிறது.
திருமணமான புதுமணத் தம்பதிகளான மொட்டை ராஜேந்திரனும், கல்யாணி நாயரும் ஒரு வீட்டில் தேனிலவு கொண்டாட செல்கிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. அது அவர்களை சேர விடாமல் தடுக்கிறது. அது ஏன்? மொட்டை ராஜேந்திரனும், கல்யாணி நாயரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.