பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கேளிக்கை வரி பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த "புதிய படங்களை வெளியிட மாட்டோம்" போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரமும் எந்த புதிய படங்களும் வெளிவரவில்லை. அரசுடனான பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலவுகிறது. தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தீபாவளிக்குள் பிரச்சினை முடிந்து படம் வெளிவருமா என்ற சூழ்நிலையும் இருக்கிறது. மெர்சல் படம் மட்டுமே தீபாவளிக்கு கண்டிப்பாக வரும் என்கிற ரீதியில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற படங்கள் தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்தில் சார்பில் தயாரித்திருக்கும் முதல் படமான மேயாதமான் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார். மேயாதமான் படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இசை அமைத்துள்ளனர், விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண் என்றாலே ஓடி ஒதுங்கும் ஒரு மேடை இசை கலைஞனைப்பற்றிய காமெடிப் படம். "மெர்சாலன காளையுடன் மேயாத மானும் வருகிறது" என்றே விளம்பரமும் செய்கிறார்கள்.