டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம் இப்படை வெல்லும். உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார், கவுரவ் நாராயணன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இப்படை வெல்லும் படத்தின் கதையை இயக்குனர் கவுரவ் என்னிடம் சொன்னபோதே என் வீட்டில் இரண்டு கண்ணாடிகளை உடைத்துவிட்டார். அந்த அளவுக்கு விறுவிறுப்பான கதை. மொத்தம் 70 நாள் நடந்த படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் 60 நாள் கூடவே இருந்தார். படத்தின் சண்டை காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். டேனியல் பாலாஜியுடன் சண்டை போட்டபோது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் ஆர்.கே.சுரேஷிடம் சண்டைபோட்டபோது நிஜமாகவே அடித்தார். வலி தாங்க முடியவில்லை. திலீப் சுப்பராயனிடம் சென்று "சார் அந்த ஆளு நிஜமாக அடிக்கிறார், வலிக்குதுசார்" என்று சொல்லி சின்னபுள்ள மாதிரி அழுதேன். ஆர்.கே.சுரேஷ் சிக்ஸ்பேக் உடம்பு, பிட் பாடி என பயில்வான் மாதிரி இருந்தார். காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அடி வாங்கித் தான் நடித்தேன். இந்தப் படத்தில் நிறைய உழைப்பு போட்டிருக்கோம் என்றார் உதயநிதி.