Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் "விதிமுறைகள்" : தியேட்டர்கள் பின்பற்றுமா...?

13 அக், 2017 - 09:54 IST
எழுத்தின் அளவு:
Did-Theatre-owners-follow-Vishals-instruction

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இன்று(அக்., 13) காலை ஒரு முக்கியமான செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் திரையரங்க உரிமையாளர்களுக்கு 6 கட்டளைகள் போட்டிருக்கிறார் அது வருமாறு:

1.அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

2. தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையில்தான் விற்கப்பட வேண்டும்.

3. கேன்டீன்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கப்பட வேண்டும் (விலை 10 ரூபாய்).

4. வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்

5. பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.

6. ஆன்லைன் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் அளிக்கலாம். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.

இது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. எத்தனை தியேட்டர்கள், குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் எந்த அளவிற்கு இதை பின்பற்றும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

Advertisement
எந்த வெற்றியும் எளிதாக கிடைத்தது இல்லை : அட்லி மெர்சல்எந்த வெற்றியும் எளிதாக கிடைத்தது ... ஆர்.கே.சுரேஷிடம் அடிவாங்கி அழுத உதயநிதி ஆர்.கே.சுரேஷிடம் அடிவாங்கி அழுத ...


வாசகர் கருத்து (16)

Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 அக், 2017 - 08:39 Report Abuse
Mahmood Jainulabdeen தனிப்பட்ட நபரின் மேல் உள்ள வெறுப்பில் நல்ல விஷயங்களுக்கு கூட ஆதரவு கொடுக்காத மக்கள் இருக்கும் வரை சட்ட மீறல்களை யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
13 அக், 2017 - 14:46 Report Abuse
Dol Tappi Maa சினிமாக்கார்கள் வீடுகளில் கூட திருட்டு vcd online இல் தான் படம் பார்க்கிறார்கள்.
Rate this:
Rafi Mohammed - chennai,இந்தியா
13 அக், 2017 - 13:25 Report Abuse
Rafi Mohammed தியேட்டர்காரன் அடிக்கும் கொள்ளை தான் இதற்கு காரணம். அவன் ஆயிரம் இரண்டாயிரம் என்று புது படத்திற்கு விலை வைத்து கொள்ளை அடிக்கிறான். தண்ணி கொண்டு போக கூடாது. குழந்தைக்கு கூட தண்ணி கொண்டு போக அனுமதி இல்லை. என்னமோ தீவிரவாதியா சோதனை செய்வது போல சோதனை வேற. அப்புறம் மக்கள் இன்டெர்நெட்ல பார்ப்பார்கள். தியேட்டருக்கு கண்டிப்பாக வரமாட்டான்.
Rate this:
பரத்ஸ்ரீநிவாஸ் புகார் அளித்து என்ன பயன் யார் இதை தட்டி கேட்பார். போலீஸ் ஆ இல்லை பொது மக்கள் ஆ. எத்தனை முறை 100 ரூபாய் டிக்கெட் கட்டணம் இருக்கும் போதே இவர்கள் பெரிய ஹீரோ படம் வந்தால் 200 அல்லது 300 என்று கேட்பார்கள். இப்போது வேறு இவர்கள் டிக்கெட் கட்டணம் உயர்த்தி விட்டார்கள். என்ன பண்ண போகிறார்களோ.. நான் தெரியாமல் கேட்கிறேன் இவர்கள் வசூலிக்கும் கட்டனத்துகு வரி செலுத்துவார்கள் என்பது என்ன ஆதாரம்.. நாங்கள் பார்க தான போகிறோம் mersal வெளியீட்டின் பொழுது.. ஒட்டு மொத்த இரண்டு வார இழப்பையும் சேர்த்து ஒரே படத்தில் சம்பாதிக்க பிளான் செய்திருப்பார்கள்.. டிக்கெட் விலை 300 இல்ல 400நு தெரியல.. அப்ரம் ஏன் மக்கள் தமிழ் ராக்கர்ஸ் தேடி போகாமல் இருப்பார்கள்..
Rate this:
Rajasekar - trichy,இந்தியா
13 அக், 2017 - 12:27 Report Abuse
Rajasekar கூடிய சீக்கிரம் தாங்கள் தலைவர் பதவி அம்போ.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in