இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு நடிகராக தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரித்துள்ள தனுஷ், அதேப்போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து, அதில் 'தரங்கம்' படத்தை சமீபத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். அந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது
தற்போது அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. ஆம்.. கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர்ஹிட்டான 'ஆபரேசன் அலமேலம்மா' படத்தின் மூலம் பிரபலமானவர்.