ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரேஸ் படங்களின் வரிசையில் விரைவில் ரேஸ் 3 உருவாக இருக்கிறது. சல்மான், ஜாக்குலின் முன்னணி ரோலில் நடிக்க ரொமோ டிசோசா இயக்குகிறார். ரமேஷ் தருணி தயாரிக்கிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக இருந்து கால்ஷீட் பிரச்னையால் விலகியுள்ள நிலையில் இப்போது பாபி தியோல் இப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் ரமேஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், சோல்ஜர், நவாப் என இரண்டு படங்களில் பாபி தியோல் உடன் பணியாற்றி இருக்கிறேன். நல்ல மனிதர், திறமையான நடிகர். ரேஸ் 3 படத்தில் இதுவரை பார்த்திராத ஸ்டைலான பாபி தியோலை பார்க்க போகிறீர்கள் என்றார்.
ரேஸ் 3 படம் நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.