ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தான் 'ஸ்ட்ரீட் லைட்ஸ்'. இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி. கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டரே கிடையாது என்பது ஆச்சர்யம்.
அதுமட்டுமல்ல, மலையாளம், தமிழ் என இரு மொழிப்படமாக தயாராகி வருகிறது. அதேசமயம் இரு மொழிப்படம் என்றால், இரண்டு மொழிகளுக்கும் தெரிந்த நடிகர்களை நடிக்க வைத்து எடுக்காமல், மலையாள வெர்ஷனில் மலையாள நடிகர்களையும், தமிழ் வெர்ஷனில் தமிழ் நடிகர்களையும் பயன்படுத்தி, அக்மார்க் தமிழ்ப் படமாகவே எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
இந்தப்படத்தின் தமிழ் வெர்சனில் மம்முட்டியுடன் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, பிளாக் பாண்டி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்களாம். தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த சில மலையாள நட்சத்திரங்களும் இதில் நடித்துள்ளனராம். இந்தப்படத்தை இயக்கும் ஷாம்தத், பிரபலமான ஒளிப்பதிவாளர்.
கமலின் 'உத்தம வில்லன்', வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொச்சி, பொள்ளாச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, இது பக்கா ஆக்சன் படம் என்பதை அழுத்தமாக பறைசாற்றியுள்ளது.