ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எமன் படத்திற்கு பிறகு அண்ணாதுரை, காளி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரை படத்தை ஸ்ரீனிவாசனும், காளி படத்தை கிருத்திகா உதயநிதியும் இயக்குகிறார்கள். இந்த இரண்டு படத்திற்குமே தானே இசையமைக்கும் விஜய் ஆண்டனி, அண்ணாதுரை படத்திற்கு எடிட்டிங்கும் செய்திருக்கிறார். ஆக, இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரில் இருந்து இப்போது எடிட்டராக பிரமோஷன் பெற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.
மேலும், இந்த அண்ணாதுரை, காளி படங்களின் பர்ஸ்ட் லுக் ஒரே நாளில் வெளியான நிலையில், அண்ணாதுரை தெலுங்கு பதிப்பான இந்திரசேனா படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டார். இதனால் அண்ணாதுரை படத்திற்கு தெலுங்கிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் திரைக்கு வரும் அண்ணாதுரை படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. தனக்கே உரிய ஆக்சன் திரில்லர் கதையில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் அவர் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறாராம். அதில் ஒன்று குடிகாரன் வேடமாம். அதில் தாடி வைத்து நடித்துள்ளார்.