பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தற்போது கேளிக்கை வரி சம்பந்தமான பேச்சுவார்த்தை நடக்கிறது. அதன்காரணமாக புதிய படங்கள் எந்த தேதியில் இருந்து வெளியாகும் என்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் இன்னும் அறிவிக்கவில்லை.
இருப்பினும், மெர்சல் தீபாவளிக்கு வருவதை அந்த படத்தை தயாரித்துள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வருகிற 18-ந்தேதி உலமெங்கிலும் 3292 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில், ரிலீசுக்கு முன்னதாக டிரைலர் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், ரிலீசுக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருவதால், டிரைலர் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.