பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படக் கல்லூரி புனே திரைப்படக் கல்லூரியான பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. இதன் தலைவர்களாக ஹிந்தி இயக்குனர்கள், நடிகர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது பதவி வகித்து வந்த இயக்குனர் கஜேந்திர சவுகான் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. புதிய தலைரை நியமிப்பதில் கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக பிரபல நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுபம் கேர் இந்திய மொழிகளில் 500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர். இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள். பெற்றவர். மும்பையில் நடிப்பு பயிற்சி கல்லூரியும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் கால் பதித்துள்ளார்.