பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சந்தானம் ஹீரோவாக நடிக்க அடுத்து வெளிவர இருக்கும் படம் சக்க போடு போடு ராஜா. இதில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத்ராஜ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விடிவி கணேஷ் தயாரித்து, நடிக்கவும் செய்கிறார். சிம்பு இசை அமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சந்தானம் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதுடன் சந்தானத்துடன் இணைந்து ஆடவும் செய்திருக்கிறார்கள்.
"கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே கலங்க நா கோழையில்லே" என்று துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.