ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐந்து கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்த தெலுங்குப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சிம்பு நடிப்பதாக வெளியான செய்தியை பொய்யாக்கி, தன்னுடைய மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் நடிகர் விக்ரம்.
அப்போது இந்த படத்தை தமிழில் இயக்குவது யார் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்த விக்ரம், பின்னர் பாலா இயக்குவதாக அறிவித்தார். இதுவரை ரீமேக் படம் இயக்காத பாலா, விக்ரம் கேட்டுக் கொண்டதால் துருவை வைத்து தமிழில் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கை இயக்க சம்மதித்தாராம்.
பாலா இயக்கத்தில் விக்ரம் சில படங்களில் நடித்துள்ள நிலையில் இப்போது விக்ரம் மகன் துருவையும் பாலா இயக்கவிருக்கிறார். தற்போது, 'நாச்சியார்' படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக உள்ளார் பாலா.
இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. நாச்சியார் வெளியான பிறகே துருவ் நடிக்கும் படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறும் என்கிறது பாலா வட்டாரம். அது மட்டுமல்ல, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் கருவை மட்டும் வைத்துக் கொண்டு திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி மாற்ற திட்டமிட்டுள்ளாராம் பாலா.