பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் 'லிங்கா' படத்திற்குப் பிறகு கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்திய படமாக 'விவேகம்' படம் அமைந்துவிட்டது. ஒரு பக்கம் படத்தின் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றார்கள், மறுபக்கம் படம் லாபத்தைத் தரவில்லை, வாங்கியவர்களுக்கு நஷ்டம் என்றார்கள். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'விவேகம்' படத்தையும், அஜித்தைப் பற்றியும் வழக்கம் போல எவ்வளவு பாராட்ட வேண்டுமோ, பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 24ம் தேதி வெளிவந்த 'விவேகம்' படத்திற்கு முதல் சில நாட்கள் மட்டும் மிகப் பெரிய ஓபனிங் இருந்தது. அதன்பின் எதிர்பார்த்த வசூலைத் தராமல் படம் பின்னடைவைச் சந்தித்தது.
இதனிடையே, 'விவேகம்' படம் நாளை 50வது நாளைத் தொட உள்ளது. அஜித் ரசிகர்கள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.