கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஒரு இசையமைப்பாளர் நடிக்கும் படத்திற்கு இன்னொரு இசையமைப்பாளர் வந்து வாழ்த்து சொல்வது ஆச்சரியமானது தான். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் '100% காதல்' படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படம் தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க நாகசைதன்யா, தமன்னா நடிக்க வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய '100 % லவ்' படத்தின் ரீமேக். தெலுங்கில் படத்தை இயக்கிய சுகுமார், தமிழில் '100% காதல்' படத்தைத் தயாரிக்கிறார். அவருடைய நண்பரான சந்திரமௌலி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இன்று நடைபெற்ற பூஜையில் தெலுங்கில் இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் வந்து கலந்து கொண்டு நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரை வாழ்த்தினார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' பட நாயகி ஷாலினி பான்டே நடிக்கிறார். இப்படம் மூலம் ஷாலினி தமிழில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படங்களில் தயாரிப்பில் இருக்கும் ஏழாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. “செம, அடங்காதே, 4ஜி, ஐங்கரன், நாச்சியார், குப்பத்து ராஜா” ஆகிய படங்களில் ஜி.வி. ஏற்கெனவே நாயகனாக நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகிறது.