அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் 2.0 படத்தின் ஒரு பாடல்காட்சி தவிர அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே முடித்துவிட்டு,போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர்.
எடுக்கப்படாமல் இருந்த அந்த ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட 'செட்'டில் ரஜினியும், எமி ஜாக்சனும் நடித்து வருகிறார்கள்.
இந்த பாடல் காட்சியுடன் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் இம்மாதம் 27-ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கிறது.
இதனை தொடர்ந்து '2.0' டீஸர் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நவம்பர் 22-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. டிரைலர் வெளியீட்டு விழாவை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.