நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைத்துள்ள மெர்சல் படம் ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், தீபாவளி வெளியீடாக வருகிற 18-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.
எத்தனை தியேட்டர்களில் படம் ரிலீஸ் என்பதே விஜய் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது இப்போது கௌரவத்துக்குரிய விஷயமாகிவிட்டது. அஜித் நடித்த விவேகம் படத்தைவிட அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் 'மெர்சல்' படத்துக்கு தியேட்டர்களை கமிட் பண்ணி வருகின்றனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எத்தனை தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்ற தகவல்கள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. தற்போது கிடைத்த தகவலின்படி, 3292 தியேட்டர்களில் 'மெர்சல்' படம் வெளியாகவிருக்கிறது. இதை தேனாண்டாள் பிலிம்ஸின் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். மேலும் தியேட்டர்கள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழில் வெளியாகும் அதே தினத்தில் மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படம் வெளியாகவிருக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மெர்சல்' இந்நிறுவனத்தின் 100-ஆவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.