தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
விஜய் தேவரகொன்டா - ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். பாலா இயக்குகிறார். அக்சராஹாசன் அல்லது ஷ்ரியா சர்மா ஆகிய இருவரின் ஒருவர் நாயகியாக நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அர்ஜூன் ரெட்டி படத்தை ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாம். அந்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், பாலிவுட்டின் இளவட்ட நடிகர்களான ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இவர்களில் ஒருவர் தான் விஜய் தேவரகொன்டா வேடத்தில் நடிக்கிறார்களாம்.