பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் மெர்சல் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தெலுங்கு இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தனது வேடம் குறித்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்களைப்போலவே இந்த படத்திலும் எனக்கும், விஜய்க்குமான ரொமான்ஸ் காட்சிகள் நிறைய உள்ளன. கதைப்படி டாக்டர் வேடத்தில் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளேன். நானும் மருத்துவத்துறையில் உள்ள ஒரு பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.