ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட். அதுமட்டுமல்ல பார்லிமென்ட் உறுப்பினரும் கூட. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கேன்சரில் இருந்து மீண்டு வந்த இவர், முன்னைப் போலவே, சுறுசுறுப்புடன் ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது கதையின் நாயகனாக சுவர்ண புருஷன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் இன்னொசன்ட்..
இந்தப்படத்தில் இவர் தீவிரமான மோகன்லால் ரசிகராக நடித்து வருகிறார். ஒரு கிராமத்தில் உள்ள தியேட்டர் ஒன்றின் ஆபரேட்டராக ரப்பாயி என்கிற கேரக்டரில் நடிக்கும் இன்னொசன்ட், அந்த தியேட்டரில் அடிக்கடி மோகன்லால் படங்களாக திரையிட்டு, அந்த ஊரில் உள்ள முக்கால்வாசி பெயரை மோகன்லால் ரசிகராக மாற்றி வைத்திருப்பாராம்.
ஒருநாள் இன்னொசன்ட் அந்த தியேட்டரை விட்டும், ஊரைவிட்டும் கிளம்பவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதைதொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிப் படமாம். இந்தப்படத்தை சுனில் பூவேலி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரிஞ்சாலக்குடா என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது.