Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் ரசிகராக மாறிய நடிகர் சங்க தலைவர்

10 அக், 2017 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Actor-Innocent-to-act-as-mohanlal-fan

மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட். அதுமட்டுமல்ல பார்லிமென்ட் உறுப்பினரும் கூட. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கேன்சரில் இருந்து மீண்டு வந்த இவர், முன்னைப் போலவே, சுறுசுறுப்புடன் ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது கதையின் நாயகனாக சுவர்ண புருஷன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் இன்னொசன்ட்..

இந்தப்படத்தில் இவர் தீவிரமான மோகன்லால் ரசிகராக நடித்து வருகிறார். ஒரு கிராமத்தில் உள்ள தியேட்டர் ஒன்றின் ஆபரேட்டராக ரப்பாயி என்கிற கேரக்டரில் நடிக்கும் இன்னொசன்ட், அந்த தியேட்டரில் அடிக்கடி மோகன்லால் படங்களாக திரையிட்டு, அந்த ஊரில் உள்ள முக்கால்வாசி பெயரை மோகன்லால் ரசிகராக மாற்றி வைத்திருப்பாராம்.

ஒருநாள் இன்னொசன்ட் அந்த தியேட்டரை விட்டும், ஊரைவிட்டும் கிளம்பவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதைதொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிப் படமாம். இந்தப்படத்தை சுனில் பூவேலி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரிஞ்சாலக்குடா என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது.

Advertisement
நடிகர் சங்கத்தை உடைக்க சதி : முகேஷ் குற்றச்சாட்டுநடிகர் சங்கத்தை உடைக்க சதி : முகேஷ் ... நான்காவது முறையாக அப்பா ஆனார் பவன் கல்யாண் நான்காவது முறையாக அப்பா ஆனார் பவன் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in