'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அமைந்தது. விஜய்சேதுபதியின் சமீபத்திய ரிலீஸான 'கருப்பன்' படம் ஏ சென்டரில் படு தோல்வியை சந்தித்தாலும் பி அன்ட் சி சென்டர்களில் ஓரளவுக்கு எதிர்பார்த்த வசூலைக் குவித்துள்ளது.
உதாரணத்துக்கு 70 லட்சத்துக்கு வாங்கப்பட்ட டிகே ஏரியாவில் 1.50 கோடி வசூலை குவித்திருக்கிறது. இதில் 90 லட்சம் ஷேராகவே கிடைத்திருக்கிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் 'ஜுங்கா'படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அந்தப் படத்தின் விநியோக உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியது ஏ அன்ட் பி குரூப் நிறுவனம்.
'ஜுங்கா'வைத் தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதின் இன்னொரு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையும் முன்கூட்டியே வியாபாரமாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'.
இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது. இது ஒரு பேன்டஸி காமெடிப் படம்.