ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து பத்மாவதி என்ற படத்தை இயக்கி உள்ளார். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கிறது.
பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அவரது கணவராக ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். பத்மாவதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரமாண்டமான கோட்டை, தீபிகா, ஷாகித், ரன்வீர் சிங்கின் அசத்தலான தோற்றங்கள், போர்க்கள காட்சிகள்... என ஒரு சரித்திர படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன. பாகுபலி அளவிற்கு பிரமாண்டம் இல்லாவிட்டாலும் பாகுபலியை மிரட்டும் அளவுக்கு விஷூவல் அமைந்துள்ளது.
டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் டிரண்ட்டானது. பாலிவுட்டை சேர்ந்த பல திரையுலக பிரபலங்கள் பத்மாவதி டிரைலரை புகழ்ந்து வருகின்றனர். பத்மாவதி படம் டிச., 1-ம் தேதி வெளியாக உள்ளது.