'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜிஎஸ்டி விதிப்பும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் திரையுலகத்தில் அதிகமாகவே உள்ளது. தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் ஜிஎஸ்டி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதால் டிக்கெட் கட்டணங்கள் விலை உயர்த்தப்பட்டன.
சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. மத்திய அரசும் சில பொருட்களுக்கான வரி விதிப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இதனிடையே, 'பிரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்து ஜிஎஸ்டி விதிப்பு பற்றி அவருடன் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சினிமாவையும் சூதாட்டத்தையும் ஒரே ஜிஎஸ்டி வகையில் வைத்திருப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் இது பற்றி பேச வேண்டும். உங்கள் பேச்சு வார்த்தை திரையுலகத்தையும், ரசிகர்களையும் காப்பாற்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.