'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெய், அஞ்சலி இணைந்து நடித்துள்ள படம் பலூன். நிஜ காதலர்கள் படத்திலும் காதலர்களாக நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஜனனி அய்யரும் இன்னொரு ஹீரோயினாக நடித்திருக்கிறார். யுவன் இசை அமைத்திருக்கிறார். சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சினிஷ் இயக்கி உள்ளார். படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சினிஷ் கூறியதாவது:
சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற பலூன் எந்தவித கட்டும் இன்றி யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது. எந்த வித கட்டும் இன்றி வெளிக்கொண்டு வருவதில் ஆவலோடு இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கு சம்பந்தம் இருப்பதால் எந்த விட கட்டும் இல்லாமல் படத்தை வெளிக்கொண்டு வருவதில் முனைப்போடு இருந்தேன். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்த விட கட்டும் இன்றி சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து பலூன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. என்றார் சினிஷ்