சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சென்னையில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேசியதாவது: ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ரஜினி , கமலிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அறங்காவலர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஜிஎஸ்டியால் நடிகர் சங்க கட்டட செலவு அதிகரிக்கும் என்றார்.
நடிகர் விஷால் பேசியதாவது: நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் விதிமுறைகள் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது. நல்லதை மட்டுமே காண முடியும். அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சஙக கட்டடம் கட்டப்படும். பொது மக்கள் சென்று பார்வையிடும் வகையில் கட்டப்படும்.
கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டது. 40 சதவீத வரி செலுத்தி தொழில் நடத்த முடியாது. கேளிக்கை வரியை ரத்து செய்ய அரசிடம் கருணாஸ் வலியுறுத்த வேண்டும். கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், சினிமா தொழில் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதி பெயர் வேண்டும்
கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா மற்றும் ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலையில் திமுக தலைவர் கருணாநிதி பெயர் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.