மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு தற்போது தலைப்பை தேர்வு செய்து விட்டார்களாம். படத்திற்கு சஞ்சு என பெயரிடப்பட்டுள்ளதாம்.
சஞ்சய் தத்தின் குடும்ப உறுப்பினர்களும், சினிமா நண்பர்களும் அவரை சஞ்சு என்று தான் செல்லமாக அழைப்பார்களாம். அதனால் அதையே இப்படத்திற்கு தலைப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இப்படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் நடிக்கும் நடிகர் ரன்பீர் கபூர், படத்தின் பெரும்பாலான பகுதி சூட்டிங்கை முடித்து விட்டாராம். இன்னும் படத்தின் பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளதாம்.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தயாரித்து, இயக்குகிறார். இவருடன் இணைந்து விது வினோத் சோப்ராவும் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.