‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 3டி, மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'எந்திரன்' படத்தின் 2 ஆம் பாகம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட '2.0' படத்தின் மேக்கிங் வீடியோவை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிட்டனர். ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்த வீடியோவை யுடியூபில் 87 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்தனர்.
இந்நிலையில், 2.0 படத்தின் புதிய 3டி மேக்கிங் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர். இந்த வீடியோ பற்றி ரசிகர்கள் மத்தியில் சற்று குழப்பம் நிலவுகிறது. இன்று வெளியாகும் 2.0 மேக்கிங் வீடியோ 3டியில் வெளியிடப்படுகிறதா? அதை 3டி கண்ணாடி இல்லாமல் சாதாரணமாகப் பார்க்க முடியுமா? பார்த்தால் 3டி எபெக்ட் கிடைக்குமா என்றெல்லாம் குழம்பிக்கிடக்கிறார்கள்.