Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நள்ளிரவில் சமந்தா, நாக சைதன்யா திருமணம் நடந்தது

07 அக், 2017 - 09:55 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாயும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். சமந்தா தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர்.

பின்னர் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகை ஆனார். இருவரும் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி இருவரும் லிவ்விங் டூ கெதராக வாழத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் திருணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று கோவாவில் உள்ள டபிள்யூ என்ற 7 நட்சத்திர கடற்கரை ஓட்டலில் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலிகட்டினார். திருமணத்துக்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது.

திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். உறவினர்கள் 2 தனி விமானத்தில் கோவா சென்று இருந்தனர். நாக சைதன்யா, சமந்தாவின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்து இருந்தனர். நடிகர்-நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இருந்தாலும் பாடகி சின்மயி அவரது கணவரும், நடிகருமான ராகுல் பங்கேற்றனர். நேற்று மாலை 3 மணிக்கு சமந்தாவுக்கு மருதானி சடங்குகள் நடந்தன.

நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி புடைவையை நவீன வேலைப்பாடுகளுடன் புதுப்பித்து திருமண புடைவையாக சமந்தா உடுத்தி இருந்தார்.

சமந்தா கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கோவாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் ஒட்டலில் விருந்து நடக்கிறது. அடுத்த வாரம் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
சங்கமித்ரா விரைவில் தொடங்குகிறது : குஷ்பு தகவல்சங்கமித்ரா விரைவில் தொடங்குகிறது : ... கைது எதிரொலி : சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் ஜெய் சரண் கைது எதிரொலி : சைதாப்பேட்டை ...


வாசகர் கருத்து (6)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07 அக், 2017 - 11:30 Report Abuse
Srinivasan Kannaiya என்றைக்கு மணமுறிவு நாள்...அதுதானே சினிமா துறையினரிடம் நடக்கிறது...
Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
07 அக், 2017 - 11:06 Report Abuse
kuthubdeen நல்ல கூத்து ..இப்படியும் இல்ல ..அப்படியும் இல்ல ..அது என்ன ஒரே ஜோடிக்கு இரண்டு தடவ திருமணம் ...கேட்டா காதல் கத்திரிக்கா ,,காதலுக்குஜாதிமதம் கிடையாதும்பாங்க ..பிறக்கும் குழந்தைகள் என்ன மதமோ ...
Rate this:
Kumz - trichy,இந்தியா
07 அக், 2017 - 14:19Report Abuse
Kumz உன்ன மதவெறி பிடிச்ச கூடத்துக்கு தான் அந்த பிரச்சின பிறந்த குழந்தைக்கு மதத்த பத்தி என்னடா தெரியும்...
Rate this:
07 அக், 2017 - 15:40Report Abuse
jackjoshuafirst day hindu . second day Christian.cycle goes on .like their marriage . simple........ 😁😁😁😁...
Rate this:
Ayappan - chennai,இந்தியா
07 அக், 2017 - 10:58 Report Abuse
Ayappan வாழ்க வளமுடன்
Rate this:
Public interest - Almaty,கஜகஸ்தான்
07 அக், 2017 - 10:43 Report Abuse
Public interest This is very important news for the public.Because no one is getting marriage in the world.Media to highlight important issues to public.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film maayavan
  • மாயவன்
  • நடிகர் : சந்தீப் கிஷன்
  • நடிகை : லாவண்யா திரிபாதி
  • இயக்குனர் :சி.வி. குமார்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in