சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்களது திருமணம் கோவாவில் இன்று(அக்., 6) விடிய விடிய விமரிசையாக நடக்கிறது.
கோவாவில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலான டபிள்யூவில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கி உறவினர்கள் 150 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். நாக சைதன்யா இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து முறைப்படி புரோகிதர்களைக் கொண்டு நடக்கிறது. இன்று காலை முதலே திருமண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாலை மெகந்தி நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு விருந்தும், நள்ளிரவு 11.52 மணியளவில் திருமணமும் நடக்கிறது.
சமந்தா கிறிஸ்தவர் என்பதால் நாளை(அக்., 7) மாலை 5.30 மணி முதல் 6.30-க்குள், கோவாவில் உள்ள பெரிய தேவாலயம் ஒன்றில் திருமணம் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலகினர், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கான செலவு ரூ.10 கோடி என்கிறார்கள்.