'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை லதா. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு வீட்டுக்கு வந்த மருமகள், என்ற தமிழ் படத்திலும், அந்தாள ராமு, காந்தி புட்டின தேசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.
அதன்பின்னர் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்க. நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் உள்ளிட்ட படங்களில் லதா நடித்தார்.
ஆனாலும் அவருக்கு சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதை ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் கூறியிருக்கிறார் லதா. தாரளாமாக நடிக்கலாம் என்றார்.
அப்போது சிவாஜி, சிவாகாமியின் செல்வன் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருந்தார். அதில் நடிக்க வாணிஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனாலும் அதில் சிவாஜி இரண்டு வேடத்தில் நடித்ததால் இரண்டாவது சிவாஜியின் ஜோடியாக நடித்தார் லதா. சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம் இதுதான்.