ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி, பீட்சா, முண்டாசுப்பட்டி என்று பல வெற்றிப் படங்களை தயரித்த சி.வி.குமார் இயக்குநராக புரமோஷனான படம் மாயவன். தெலுங்குப்பட ஹீரோவான சந்தீப் கிஷன், கன்னட நடிகை லாவண்யா த்ரிபாதி நடித்துள்ள 'மாயவன்' படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
'மாயவன்' படத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். விஐபி-2, பொதுவாக எம்மனசு தங்கம் என இரண்டு பெரிய படங்கள் அதே தேதியில் ரிலீஸ் ஆனதால், 'மாயவன்' படத்தின் ரிலீஸை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் செப்டம்பர் 1 ஆம் தேதியும் மாயவன் படம் ரிலீஸ் ஆகவில்லை.
மாயவன் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அதிகப்படியான படங்களின் எண்ணிக்கை தான் காரணம் என்கிறார் சி.வி.குமார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்.