‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரு திரைப்படம் உருவாவதற்கு முன்பு அந்த படத்தின் முக்கியமான காட்சிகளை கொண்டு உருவாக்கப்படும் ஒரு முன்னோட்ட படம் பைலட் பிலிம் என்ற அழைக்கப்படுகிறது. சமீப காலமாக சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு குறும்படத்தை இயக்கி அதனையே தங்களது விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த டிரண்ட் மாறி பைலட் பிலிம் டிரண்ட் வந்திருக்கிறது.
இயக்குனர் வாய்ப்பு தேடுகிறவர்கள் தாங்கள் படமாக்க நினைத்திருக்கும் கதையை நண்பர்கள், தோழிகளை நடிக்க வைத்து சில லட்சங்களை செலவு செய்து பைலட் பிலிம் தயாரிக்கிறார்கள். இனி தயாரிப்பாளர்களிடமோ, ஹீரோக்களிடமோ கதை சொல்லத் தேவைவியில்லை. இந்த பைலட் பிலிமை போட்டு பார்த்தாலே இதுதான் படம், இப்படித்தான் படம் இருக்கும், இயக்குனரின் திறமை இதுதான் என்பது பளிச்சென்று தெரிந்து விடும்.
இப்போது அதன் அடுத்த கட்டமாக பைலட் பிலிமையே தனியாக இணையளத்தில் வெளியிடும் டிரண்ட் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பீச்சாங்கை படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் அடுத்து லேகா என்ற படத்தில் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் அருண் கார்த்திக் இயக்குகிறார். இதன் பைலட் பிலிம் தயாராகி உள்ளது. இந்த பைலட் பிலிமுக்கு திவாகரா தியாகராஜன் இசை அமைத்துள்ளார். யாமினி யக்ன மூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். நரேந்திரன் நாகராஜன் தயாரித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு இது இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. படத்தை பார்த்துவிட்டு தயாரிக்க விரும்புகிறவர்கள். ஆர்.எஸ்.கார்த்திக்கை தொடர்பு கொள்ளலாம்.