ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, விமல் ஆகிய இருவரும் கதாநாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் - 'கலகலப்பு'. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட அந்தப் படத்தில் அஞ்சலி, ஓவியா கதாநாயகிகளாக நடித்தனர். சந்தானம் காமெடியனாக நடித்திருந்த கலகலப்பு படம் ஏ,பி,சி. என அத்தனை சென்டர்களிலும் வெற்றி பெற்றது.
5 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. 'கலகலப்பு 2'வில் ஜீவா, ஜெய் இருவருத் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.
3 கோடி சம்பளம் வாங்கும் ஜீவா இந்தப்படத்தில் 1.5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 1.5 கோடி சம்பளம் வாங்கி வரும் ஜெய் இந்தப் படத்திற்கு வாங்கியது வெறும் 50 லட்சம்தான். கேத்ரின் மெரசா, நிக்கி கல்ராணி தலா 20 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர்.
இப்படியாக அனைவருக்கும் குறைவான சம்பளம் கொடுத்து கலகலப்பு- 2 படத்தை 12 கோடியில் தயாரிக்கிறார் சுந்தர்.சி.