'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் 'த்ரிஷா இல்லானா நயன்தாரா'. கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஏஏஏ படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதனால் ஆதிக்கின் எதிர்காலமே கேள்விக்குறியானது. எனவே ஜி.வி.பிரகாஷை அணுகி தனக்கு மீண்டும் கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார் ஆதிக். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த படத்திற்கு 'விர்ஜின் மாப்பிள்ளை' என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்று செய்தி வெளியாகி இருந்தது. 'விர்ஜின் மாப்பிள்ளை' என்ற டைட்டிலுக்கு பதிலாக 'த்ரிஷா இல்லானா நயன்தாரா-2' என்று டைட்டில் வைக்கவும் படக் குழுவினர் பரிசீலனை செய்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், 'த்ரிஷா இல்லானா நயன்தாரா-2' படம் பண்ணவில்லை என்றும், அப்படியொரு பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.