அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தில்லுக்குத்துட்டு படத்திற்கு பிறகு சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்க னும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். இதில் சர்வர் சுந்தரம் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அஜீத்தின் விவேகம் படத்திற்கு முன்பே திரைக்கு வர வேண்டியது. தியேட்டர் பிரச்சினை காரணமாக தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறது.
அதையடுத்து அவர் நடித்துள்ள ஓடி ஓடி உழைக்கனும், சக்க போடு போடு ராஜா பட வேலைகளும் முடிந்து வருகிறது. இதில் சக்க போடு போடு ராஜா படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது தெரிந்ததே. மேலும், இந்த படத்தில் கலக்கு மச்சான் -என்று தொடங்கும் ஒரு பாடலை அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு.
மேலும், சிம்பு-அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். அப்படி சிம்பு இசையில் அனிருத் பாடிய கலக்கு மச்சான் பாடலின் சிங்கிள் ட்ரேக் அக்டோபர் 5-ந்தேதி வெளியாகிறது.