'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் ஸ்பைடர். கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த இந்த படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல ஓப்பனிங்கே கிடைத்து வருகிறதாம்.
அந்த வகையில், ஸ்பைடர் படம் திரையிட்ட முதல் நாளில் ரூ. 51 கோடி ரூபாய் வசூலித்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதையடுத்து இரண்டாவது நாள் ரூ. 21 கோடி வசூலித்துள்ளதாம். ஆக, இரண்டு நாட்களில் ஸ்பைடர் படம் ரூ. 72 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும், இன்னும் சில தினங்களில் ஸ்பைடர் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விடும் என்றும் எதிர்பார்ப்பதாக அப் படத்தை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.