புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மீரா கதிரவன் இயக்கத்தில், கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள படம் விழித்திரு. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விழித்திரு படக்குழுவுடன் டி.ராஜேந்தரும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதை மேடையில் தன் பாணியில் அடுக்கு மொழியில் பேசி தன்ஷிகாவை விமர்சித்தார். தன்ஷிகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் டி.ராஜேந்தர் விடுவதாக இல்லை. இதனால் ஒருக்கட்டத்தில் தன்ஷிகா மேடையிலேயே கண்கலங்கிவிட்டார். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில்...
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர், நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும், தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர், அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.
டி.ராஜேந்தர், ஒரு மூத்த கலைஞர், பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர்., சுட்டிக் காட்டிய பின்னர் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆருக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.