'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
விஐபி-2 படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாட்களில் வட சென்னை படத்தின் படிப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு, அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
விஐபி-2 படத்தைப்போலவே 'மாரி-2' படத்தையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்து ஒரே நேரத்தில் வெளியிடதிட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கில் தற்போது தெரிந்த முகமாகிவிட்ட 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவியை தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது 'கரு' படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் 'மாரி-2'. 'மாரி' முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது ஒன்றரை கோடி சம்பளம் கேட்பதால் அவருக்கு பதில் சாய்பல்லவியை கமிட் பண்ணியதாக தகவல்.
இப்படத்தின் வில்லனாக நடிப்பதற்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.