விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடித்த 'பறவ' படம் ரிலீசானது. இந்நிலையில் பிஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் நடித்துள்ள 'சோலோ' படம் வரும் அக்-5 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், மலையாளம் என ஒரே சமயத்தில் இரு மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் துல்கர் நடித்துள்ள நான்கு குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. இந்த நான்கு படங்களிலும் ருத்ரா, சிவா, சேகர் மற்றும் த்ரிலோக் என நான்கு கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல.. தன்ஷிகா, நேஹா சர்மா, தீப்தி சதி, ஆர்த்தி வெங்கடேஷ், ஆன் அகஸ்டின் என ஐந்து கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் பார்வையற்றவராக நடிக்கிறார் தன்ஷிகா. இன்னொரு கதாநாயகியான பாலிவுட் நடிகை நேகா சர்மா இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார்.