இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து ஹிந்திக்கு சென்று பிரபல நடிகையாகி விட்ட அவர், தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது போர்ப்ஸ் என்ற இதழ் கடந்த ஆண்டு சீரியல்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ராவும் இடம்பெற்றுள்ளார். அதாவது, கடந்த ஆண்டு சீரியலில் நடித்தே 65 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளாராம் பிரியங்கா சோப்ரா. அவருக்கு 8-வது இடம் கிடைத்துள்ளதாம்.
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த சோபிரா வெர்கரா என்ற மாடல். இவர் ரூ. 271 கோடி சம்பாதித்து முதலிடம் பிடித்திருக்கிறாராம். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சீரியல் நடிகை போட்டியில் ஒரு இந்திய நடிகையின் பெயர் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.