பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் உலகமெங்கிலும் நேற்று முன்தினம் வெளியானது. மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதிலும் தொடர் விடுமுறை காரணமாக படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக சொல்கிறார்கள். முதல்நாள் மட்டும் உலக அளவில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாம் ஸ்பைடர் படம். இந்த தகவலை அந்த படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
மேலும், ஸ்பைடர் படத்தை நடிகர் ரஜினிகாந்திற்கும் திரையிட்ட காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த ரஜினி, மகேஷ்பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரையும் பாராட்டியிருக்கிறார். மகேஷ்பாபுவின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார், ஸ்பைடர் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறியதாக ஸ்பைடர் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.