'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'லட்சுமி மேனன் நடித்தாலே, படம் ஹிட்' என, கூறப்பட்ட
காலமெல்லாம் உண்டு.
தொடர்ச்சியாக வெற்றி படங்களில்
நடித்து வந்த அவர், ஒரு
கட்டத்தில், 'ஒரே மாதிரியான, கிராமப்புற படங்களில் நடிப்பது, அலுப்பு தட்டுகிறது; இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை' என கூறிச் சென்றார். ஆனால், அதற்கு பின், மனம் மாறி, மீண்டும்
நடிக்க வந்தாலும், ஏற்கனவே
இருந்தது போல், அவருக்கு
போதிய வரவேற்பு இல்லை.
அவர் நடித்த, மிருதன், றெக்க போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை; அதில் அவரது நடிப்பும்
பெரிதாக பேசப்படவில்லை. வாய்ப்பின்றி, வீட்டில் முடங்கி கிடந்த அவர், தற்போது, பிரபுதேவா ஜோடியாக, யங் மங் சங் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இந்த படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகையரின் பட்டியலில் இடம் பிடித்து விடுவேன்' என, திட்டவட்டமாக கூறி வருகிறாராம், லட்சுமி மேனன்.