ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்ரம் வேதா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. அதோடு வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கத் தொடங்கியிருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்மரெட்டி என்ற மெகா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கூடவே, மணிரத்னம் படத்திலும் நடிக்கிறார்.
ஆக, விஜய் சேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென்று எகிறிக்கொண்டே போகிறது. ஆனபோதும் இன்னமும் நான் ரொம்ப சாதாரணமான ஆளு. எனக்கு எதுக்கு தேவையில்லாத பில்டப் என்று எளிமையாகத்தான் பேசுகிறார் விஜய் சேதுபதி. மேலும், தனது நடிப்பு பரிமாணத்தில் அடுத்த கட்டமாக ரங்கராஜன் குமாரராஜா இயக்கும் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் அது பெண் வேடமா? இல்லை திருநங்கை வேடமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், அந்த வேடம் குறித்து விஜய் சேதுபதியைக்கேட்டால், அதை இப்போதே சொல்லி விட்டால், படத்திற்கான சுவராஸ்யம் போய் விடும். அதனால் படம் தியேட்டருக்கு வரும் வரை அதை சஸ்பென்சாகவே வைத்திருப்பது தான் நல்லது என்கிறார் விஜய் சேதுபதி.