'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'குயின்'. ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
தமிழ் பதிப்புக்கு 'பாரிஸ் பாரிஸ்' என்றும், கன்னட பதிப்புக்கு 'பட்டர்ஃபிளை' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்ரீமேக்கில் காஜல் அகர்வாலும், கன்னட ரீமேக்கில் பருல் யாதவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் அதே நேரத்தில் இந்த படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. தெலுக்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் 'குயின்' படத்தின் மலையாள ரீ-மேக்கையும் துவக்க உள்ளனர். குயின் மலையாள ரீமேக்கில் 'சம் சம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் உட்பட இதில் நடிக்கும் மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவிருக்கிறது.