இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சமந்தா - நாகசைதன்யா திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 6-ந்தேதி கோவாவில் நடக்கிறது. அதனால் தற்போது திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, திருமண தேதி நெருங்குவதால் யுத்தம் சரணம் படத்தை அடுத்து நாக சைதன்யாவை நடிக்கயிருந்த தெலுங்கு படத்தையும் நிறுத்தி வைத்திருப்பவர்கள், சமந்தா படங்களில் நடிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஒருவேளை சமந்தா மெர்சல் படத்தில் தனக்கான டப்பிங்கை பேச வரவில்லையென்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர் அட்லி. ஆனால் அதுகுறித்த தகவலை அறிந்ததும், எனக்கு நான் தான் டப்பிங் பேசுவேன் என்று சென்னை வந்து தனக்கான டப்பிங்கை பேசி விட்டு சென்றிருக்கிறார் சமந்தா. இந்த சேதி பார்சிலோனாவில் இருக்கும் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சமந்தாவை தொடர்பு கொண்டு பாராட்டினாராம்.