பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..? | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா? வில்லனா? | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித்.? | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |
டார்லிங் 2 படத்தில் நடித்த ரமீஸ் ராஜா நடிக்கும் படம் விதிமதி உல்டா. ஜனனி அய்யர் ஹீரோயின். இவர்கள் தவிர டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் "தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா..." என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"விதிமதி எல்லாமே உல்டா தான் என்பது தான் கதை. படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. பின்னணி இசை கோர்ப்பு, மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல்கள் கவனிக்கப்படுவதாக இருக்கும், பாடல்கள் அனைத்தையும் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்கிறார் இயக்குனர் விஜய் பாலாஜி.